அரசின் முக்கிய அறிவிப்பு: தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை 

தீபாவளிக்கு மறுநாளான திங்கள்கிழமை அரசு விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
 | 

அரசின் முக்கிய அறிவிப்பு: தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை 

தீபாவளிக்கு மறுநாளான திங்கள்கிழமை அரசு விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தீபாவளிக்கு மறுநாளான அக்டோபர் 28ஆம் தேதி திங்கள்கிழமை தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு வெளியூர் செல்பவர்களுக்கு வசதியாக திங்கள்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று தீபாவளிக்கு முந்தைய நாளான சனி, தீபாவளி, திங்கள்கிழமை என 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக நவம்பர் 9ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP