Logo

தங்கம் விலை கிடுகிடு உயர்வு!

நேற்றைய தினம் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், இன்று உயர்வை சந்தித்துள்ளது.
 | 

தங்கம் விலை கிடுகிடு உயர்வு!

தங்கத்தின் விலை கடந்த மாதம் ரூ.29,700க்கும் மேல் விற்கப்பட்டு வந்த நிலையில் திடீரென குறைந்தது. அதன் பிறகு ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வந்த தங்கம் விலை கடந்த 29, 30 ஆகிய தேதிகளில்
பெரும் ஏற்றத்தை சந்தித்தது. நேற்றைய தினம் தங்கத்தின் விலை மீண்டும் குறைந்த நிலையில், இன்று சற்று உயர்வை சந்தித்துள்ளது. 

சென்னையில் இன்றைய நிலவரப்படி ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.6 உயர்ந்து ரூ.3,623க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.48 உயர்ந்து ரூ.28, 984க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து ரூ.47.70க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.100 உயர்ந்து ரூ. 47,700க்கும் விற்கப்படுகிறது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP