வருகிற பிப்.23ல் பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் - ஜி.கே.மணி அறிவிப்பு!

பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் வருகிற 23ம்தேதி புதுச்சேரியில் நடைபெறும் என ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

வருகிற பிப்.23ல் பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் - ஜி.கே.மணி அறிவிப்பு!

பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் வருகிற 23ம்தேதி புதுச்சேரியில் நடைபெறும் என அக்கட்சித் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் கட்சியான அதிமுக, தமிழத்தில் உள்ள பிற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நேற்று பாமக நிறுவனர் ராமதாஸூடன் நடைபெற்ற கூட்டணி பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவடைந்ததையடுத்து, இரு கட்சிகளிடையே தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மேலும் ராஜ்ய சபா சீட்டு ஒன்றும் கொடுக்க அதிமுக உறுதி அளித்துள்ளது. 

அதே நேரத்தில் பாமகவின் கொள்கைகளான மதுவிலக்கு, நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அதிமுகவிடம் ஒரு அறிக்கையும் அளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமில்லாமல், தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் அதிமுகவுக்கு நிபந்தனையற்று முழு ஆதரவு அளிப்பதாக பாமக ஒப்பந்தம் செய்துள்ளது. 

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் வருகிற 23ம்தேதி புதுச்சேரியில் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP