துப்பாக்கி சூட்டில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 10 கோடி: வேதாந்தா நிறுவனத்திற்கு நோட்டீஸ்

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 கோடி வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கில் 2 வாரத்தில் பதிலளிக்க வேதாந்தா மற்றும் மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுளளது.
 | 

துப்பாக்கி சூட்டில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 10 கோடி: வேதாந்தா நிறுவனத்திற்கு நோட்டீஸ்

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 கோடி வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கில் 2 வாரத்தில் பதிலளிக்க வேதாந்தா மற்றும் மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு  எதிராக நடந்த கடும் போராட்டங்களுக்கு பிறகு, அந்த ஆலைக்கு சீல் வைத்து மூடப்பட்டது. அந்த போராட்டத்தின் 100வது நாளில் நடந்த கலவரத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில், பொதுமக்கள் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ. 10 கோடி வழங்க வேண்டும் என்று சிவகங்கையை சேர்ந்த விஜய் நிவாஸ் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுகுறித்து இன்னும் 2 வாரங்களில் பதிலளிக்க வேதாந்தா நிறுவனம் மற்றும் மத்திய  மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP