'அத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்கக்கூடாது'

அத்திவரதரை மீண்டும் குளத்திற்கு அடியில் வைக்கக்கூடாது என்று சடகோப ராமானுஜ ஜீயர் கோரிக்கை விடுத்துள்ளார்.
 | 

'அத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்கக்கூடாது'

அத்திவரதரை மீண்டும் குளத்திற்கு அடியில் வைக்கக்கூடாது என்று சடகோப ராமானுஜ ஜீயர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘40 வருடங்களுக்கு பிறகு வெளியில் வந்த அத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்க தேவையில்லை. கடந்த காலங்களில் திருட்டிற்கு பயந்து அத்திவரதரை தண்ணீருக்கு அடியில் வைத்தனர். அத்திவரதரை பூமிக்கு அடியில் புதைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி, அனைத்து மடாதிபதிகளும் முதல்வர் பழனிசாமியிடம் கோரிக்கை வைக்க இருக்கிறோம். அத்திவரதர் வெளியில் இருந்தால் காஞ்சிபுரம் இரண்டாவது திருப்பதியாக மாறும்’ என்றார் அவர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP