முதலமைச்சர் பழனிசாமிக்கு டாக்டர் பட்டம்!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. எம்,ஜி.ஆர்.கல்வி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகம் பட்டத்தை வழங்கினார்.
 | 

முதலமைச்சர் பழனிசாமிக்கு டாக்டர் பட்டம்!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. 

சென்னையை அடுத்த வேலப்பன் சாவடியில் உள்ள எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சரின் பணிகளை பாராட்டும் விதமாக எம்,ஜி.ஆர்.கல்வி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் முதலமைச்சர் பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகம் பட்டத்தை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி வேலுமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இதேபோல், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகத்தின் தலைவர் ஜி.சதீஷ் ரெட்டி, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், நடிகை சோபனாவுக்கும் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. 

Newstm.in 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP