வீராங்கனை கோமதிக்கு ரூ.1 லட்சம் பரிசளித்து பெருமைப்படுத்திய முதல் நபர் யார் தெரியுமா?

கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்றுவரும் ஆசிய தடகளப் போட்டியில், 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு நடிகர் ரோபோ சங்கர் ரூ.1 லட்சம் பரிசுத்தொகை அறிவித்துள்ளார்.
 | 

கத்தார் தலைநகர் தோஹாவில் 23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில்,  தடகளப்  போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், திருச்சியைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து முதலிடம் பிடித்துள்ளார். இவர் 800 மீட்டர் பந்தய இலக்கை 2.02.7 நிமிடங்களில் கடந்து தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். 

இவருக்கு பல்வேறு தலைவர்கள்,  பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் இந்நிலையில், நடிகர் ரோபோ சங்கர், வீராங்கனை கோமதியின் சாதனையை பாராட்டியதோடு, அவருக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் கூறுகையில், "கோமதி போன்ற பெண்கள் வறுமையிலும் சாதித்து காட்டியுள்ளனர். இது மற்ற பெண்களுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கும். அவரது வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர் இது போன்று மேலும் பல சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்" என்றார். 

தமிழக அரசு சார்பில் கூட இன்னும் பரிசுத்தொகை அறிவிக்காத நிலையில், ரோபோ சங்கர் முதல் நபராக வீராங்கனை கோமதிக்கு பரிசுத்தொகை அறிவித்துள்ளார். 

முன்னதாக, ரோபோ சங்கர், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்ததுடன், இருவரது குடும்பத்திற்கும் தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP