தேர்தல் அறிக்கை: மக்கள் கருத்துக்களை கேட்கும் திமுக!

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக மக்கள் தங்கள் தேவைகள் என்ன? என்பது குறித்து DMKmanifesto2019@dmk.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், சமூக வலைத்தளங்களில் #DMKmanifesto2019 என்ற ஹேஷ்டேக்கிலும் கருத்துக்களை பதிவிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 | 

தேர்தல் அறிக்கை: மக்கள் கருத்துக்களை கேட்கும் திமுக!

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக மக்கள் தங்கள் தேவைகள் என்ன? என்பது குறித்து கருத்துக்களை தெரிவிக்கலாம் என திமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி, தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி நேற்று உறுதியாகியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கி திமுக அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை குறித்து திமுக ஒரு அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்தல் அறிக்கை தொடர்பாக மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளது. 

தங்களுக்கான தேவைகள் என்ன? என்பது குறித்து தமிழக மக்கள் DMKmanifesto2019@dmk.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கருத்துக்களை அனுப்பலாம் என்றும் சமூக வலைத்தளங்களில் #DMKmanifesto2019 என்ற ஹேஷ்டேக்கிலும் கருத்துக்களை பதிவிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "நமது தமிழக நலனுக்காக திட்டம் ஏதும் உங்களிடம் உள்ளதா? தேர்தல் அறிக்கையில் உங்களது கருத்துக்களும் இடம்பெற வேண்டுமா? உங்களது கருத்துக்களை கேட்கிறோம்.  DMKmanifesto2019@dmk.in என்ற மின்னஞ்சலிலும், #DMKmanifesto2019 என்ற ஹேஷ்டேக்கிலும் கருத்துக்களை பதிவிடலாம். நமது நாட்டிற்காக இணைந்து பணியாற்றுவோம்" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP