திமுக முன்னாள் எம்.பி எஸ். சிவசுப்பிரமணியன் காலமானார்!

அரியலூரைச் சேர்ந்த திமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் எஸ். சிவசுப்பிரமணியன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார்.
 | 

திமுக முன்னாள் எம்.பி எஸ். சிவசுப்பிரமணியன் காலமானார்!

அரியலூரைச் சேர்ந்த திமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் எஸ். சிவசுப்பிரமணியன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார்.

திமுக தலைவர் கலைஞர் அவர்களுக்கு மிக நெருக்கமானவராக இருந்தவர் சிவசுப்பிரமணியன். 1998 - 2004 ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினராகவும்,1889 ஆண்டு ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினராகவும், 1971 - 1976 , 1986 - 1990, காலகட்டத்தில் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராகவும் பணியாற்றியவர். மேலும், திமுகவில் சட்ட திட்ட திருத்தக் குழு உறுப்பினராக இருந்தவர்.

இவரது மகன் எஸ்.எஸ்.சிவசங்கர் தற்போது அரியலூர் மாவட்டச் செயலாளராக உள்ளார். 

உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிவசுப்பிரமணியன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் ஆண்டிமடத்தில் உள்ள அவரது சொந்த இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

திமுக முன்னாள் எம்.பி எஸ். சிவசுப்பிரமணியன் காலமானார்!

கடந்த நவம்பர் மாதம், எஸ்.சுப்பிரமணியன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும், விழுப்புரம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ கு.ராதாமணியும் இன்று உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். ஒரேநாளில் திமுகவில் இருவர் காலமானது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ காலமானார்!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP