பன்முகத் தன்மை கொண்ட தலைவர் கருணாநிதி: முதல்வர் பழனிச்சாமி புகழாரம்!

பன்முகத்தன்மை கொண்ட தலைவர் கருணாநிதி மற்றும் 5 முறை தமிழக முதல்வராக இருந்த பெருமைக்குரியவர் என சட்டசபையில் கருணாநிதி மீதான இரங்கல் தீர்மானத்தின் மீது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புகழாரம் சூட்டியுள்ளார்.
 | 

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தின் 2வது நாளான இன்று, மறைந்த தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது. தமிழக முன்னாள் முதல்வர் மற்றும் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் கருணாநிதி ஆகியோருக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தீர்மானங்களை முன்மொழிந்தார்.

இந்த தீர்மானத்தின் மீது உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, " 5 முறை தமிழக முதல்வராக பணியாற்றி சாதனை படைத்தவர் கருணாநிதி. இந்தித் திணிப்பை எதிர்த்து 13 வயதினிலே போராடியவர் கருணாநிதி. சிறப்பான திட்டங்களை தமிழகத்திற்கு அளித்தவர். அதை அதிமுக சில நேரங்களில் பின்பற்றியும் உள்ளது. தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வென்றவர். அவருடைய சாதனை இந்த மண்ணில் எப்போதும் நிலைத்திருக்கும்" - என்று புகழாரம் சூட்டினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP