இயக்குநர் கௌதமன் கைது!

ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராக போராட்டம் நடத்திய இயக்குநர் கௌதமனை திருவல்லிக்கேணி போலீசார் திடீரென கைது செய்துள்ளனர்.
 | 

இயக்குநர் கௌதமன் கைது!

ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராக போராட்டம் நடத்திய இயக்குநர் கௌதமனை திருவல்லிக்கேணி போலீசார் திடீரென கைது செய்துள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கோரி ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தில் போராட்டங்கள் உச்சக்கட்டத்தில் நடந்தது. அப்போது சென்னையில் ஐ.பி.எல் போட்டிகள் நடக்க கூடாது என்று கூறி பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தினர். அதில் இயக்குநர் கௌதமனும் போராட்டம் நடத்தினார்.

இந்நிலையில் இன்று சூளைமேடு பகுதியில் இருக்கும் கெளதமனின் வீட்டிற்கு சென்ற போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் அவர் மீது கொலை முயற்சி, அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட 14 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் போலீசார் அவரை கைது செய்தனர்.  

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP