நெல்லை தம்பதியருக்கு வாழ்த்து தெரிவித்த கிரிக்கெட் & பாலிவுட் பிரபலம்! எதற்கு தெரியுமா?

கொள்ளையர்களை விரட்டி அடித்த நெல்லை தம்பதியினருக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
 | 

நெல்லை தம்பதியருக்கு வாழ்த்து தெரிவித்த கிரிக்கெட் & பாலிவுட் பிரபலம்! எதற்கு தெரியுமா?

கொள்ளையர்களை விரட்டி அடித்த நெல்லை தம்பதியினருக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் கல்யாணிபுரம் பகுதியைச் சேர்ந்த சண்முகவேல் மற்றும் அவரது மனைவி செந்தாமரை தோட்டத்துடன் கூடிய தங்களது வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு சண்முகவேல் வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்தபோது, இரண்டு கொள்ளையர்கள் வீட்டிற்குள் புகுந்து அவரை தாக்கினர்.

 ஆனால் சண்முகவேல் சிறிதும் பயப்படாமல், எதிர்த்து நின்று கொள்ளையர்களை தாக்கி அடித்து விரட்டினார். இந்த சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. வயதான நிலையிலும் துணிச்சலுடன் கொள்ளையர்களை விரட்டியடித்த அந்தத் தம்பதியினருக்கு தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் பலர் சமூக வலைத்தளங்களின் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தனது ட்விட்டர் பக்கத்தில் நெல்லை தம்பதியினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

 

ஹர்பஜன் சிங் ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்றதில் இருந்து, சமீபகாலமாக முக்கிய விழாக்களுக்காக தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது, தமிழகத்தில் முக்கிய நிகழ்வுகள் குறித்து கருத்து பதிவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும் தனது ட்விட்டர் பக்கத்தில் நெல்லை தம்பதியினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP