மத்திய அரசுடன் இணைக்கமாக இருப்பது திட்டங்கள் பெறுவதற்காகவே: முதலமைச்சர் பழனிசாமி

மத்திய அரசுடன் இணைக்கமாக இருப்பது நலத் திட்டங்களை பெறுவதற்காகவே என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 | 

மத்திய அரசுடன் இணைக்கமாக இருப்பது திட்டங்கள் பெறுவதற்காகவே: முதலமைச்சர் பழனிசாமி

மத்திய அரசுடன் இணைக்கமாக இருப்பது நலத் திட்டங்களை பெறுவதற்காகவே என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

தென்காசி மாவட்டத்தின் நிர்வாக பணிகளை தொடங்கி வைத்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, " தென்காசி மாவட்ட மக்களின் 33 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. புதிய மாவட்டங்கள் உருவாக்கத்திற்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் எந்த வித தொடர்புமில்லை. உள்ளாட்சி தேர்தலை நிறுத்த சிலர் சதி செய்கின்றனர். எத்தனை முட்டுக்கட்டைகள் போட்டாலும் உள்ளாட்சி தேர்தல் நடந்தே தீரும். செண்பகவள்ளி அணைக்கட்டு பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2018 - 10 ல் குடிமராமத்துப் பணிக்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் தமிழத்திலுள்ள குளங்கள், குட்டைகள் என நீர்நிலைகள் அனைத்தும் தூர்வாரப்படும்.

முதலமைச்சர் சிறப்பு குறைதீர்ப்பு முகாம்களில் 9 லட்சத்திற்கும் அதிகமானோர் மனு அளித்துள்ளனர். அதில் 5,11,186 மனுக்கள் மீதான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வருமானம் என்றாலும் முதியோர் உதவித் தொகை வழங்கப்படும். இவ்வாறு ஏழைகளுக்கு ஏற்ற அரசாக தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை அதிமுக அரசு செய்து வருகிறது. திட்டங்கள் பெறுவதற்காகவே மத்திய அரசுடன் இணைக்கமாக அதிமுக உள்ளது. இணைக்கமாக இருந்ததாலும், தமிழக அரசின் தொடர் வலியுறுத்தல் காரணமாகவும், தமிழகத்தில் 6 புதிய மருத்துவக்கல்லூரிகள் தொடங்க அனுமதி பெறப்பட்டுள்ளது. இது அதிமுக அரசின் மிகப்பெரிய சாதனை. அதேபோல் நெகிழிக்கு தடை விதித்து நாட்டிற்கே வழிகாட்டியாக தமிழகம் உள்ளது. 

ஆட்சியில் இருந்தபோதும், இல்லாதபோதும் மக்களுக்கு எதையும் செய்யாதவர்களுக்கு பாவமன்னிப்பு கிடைக்காது. அதிமுக அரசு பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்த 453 அறிவிப்புகளில் 88 அறிவிப்புகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. 280 அறிவிப்புகளில் பெரும்பகுதி பணிகள் நிறைவடைந்துள்ளது.  74 அறிவிப்புகள் திட்ட அனுமதிக்காக பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது". இவ்வாறு கூறினார்.

Newstm.in 


    

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP