நடிகா் ரித்திஷ் மரணத்தில் குழப்பம்?

நடிகரும், முன்னாள் எம்.பியுமான ஜே.கே.ரித்திஷ் மரணத்தில் தற்போது ஒரு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
 | 

நடிகா் ரித்திஷ் மரணத்தில் குழப்பம்?

நடிகரும், முன்னாள் எம்.பியுமான ஜே.கே.ரித்திஷ் மரணத்தில் தற்போது ஒரு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மக்களவை தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து கடந்த 2 நாட்களாக தேர்தல் பிரச்சாரத்திற்காக நடிகா் ஜே.கே.ரித்திஷ் ராமநாதபுரத்தில் தங்கியிருந்தார்.

இன்று மதிய உணவு இடைவேளையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியானது.  இந்நிலையில் அவரை ராமநாதபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பாிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்து விட்டதாக தொிவித்தனா்.

இதையடுத்து ரித்திஷின் உடல் அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உறவினா்கள் அவரது உடலை பாா்த்து கதறி அழுதனா். அப்போது அவா் கண் விழித்து பாா்த்ததாக அவரது உறவினா்கள் தொிவித்தள்ளனா்.

இதனால் அவரது மரணத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவலறிந்த செய்தியாளா்கள் அவரது வீட்டிற்கு முன் குவிந்துள்ளனா்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP