முதல்வர் சிரித்த முகத்தோடு இருக்கிறார்: எடப்பாடி பழனிசாமி குறித்து சரோஜா தேவி

தான் பார்த்த முதல்வர் அனைவரும் சிடுசிடுவென இருப்பார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி தான் சிரித்த முகத்தோடு இருக்கிறார் என்றும் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.
 | 

மூன்று தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்த பெருமை கொண்ட பழம்பெரும் நடிகை சரோஜாதேவி நேற்று சென்னையில் நடைபெற்ற 'சென்னையில் திருவையாறு' தொடக்க விழாவில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். இதில் சிறப்புரை ஆற்றிய சரோஜாதேவி பேசும் போது, "நான் இதுவரை பார்த்த முதல்வர்களில் முகத்தில் எப்போதும் புன்சிரிப்போடு இருப்பவர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே. மற்றவர்கள் சிடு சிடுவென இருப்பார்கள். தமிழகத்திற்கு என்றைக்கும் எடப்பாடி பழனிசாமியே முதல்வராக இருக்க வேண்டும் மேலும் எடப்பாடி அவர்கள் எம்.ஜி.ஆரை போல ஏழை மக்களுக்கு பல திட்டங்களை கொண்டு வர வேண்டும்" கூறினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP