உலக படங்களுக்கு நிகராக நிற்கும் தமிழ் படங்கள் - முதலமைச்சர் பழனிசாமி பாராட்டு!!!

உலக படங்களுக்கு நிகரான தமிழ் படங்களும் சமீப காலங்களில் தயாரிக்கப்படுவது மிகவும் பெருமையாக உள்ளதாக கூறியுள்ளார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி.
 | 

இந்திய சினிமா நூற்றாண்டை கடந்து சாதனை படைத்திருக்கும் நேரத்தில், தமிழக சினிமாவும் உலக படங்களுக்கு நிகராக தயாரிக்கப்படுவதை பார்க்கும் போது மிகவும் பெருமையாக இருப்பதாக கூறியுள்ளார் தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி. உலகமெங்கும் பேசப்படும் திரைப்படங்களைத் தருபவர்கள் தமிழ் திரையுலகினர் என்பது பெருமைக்குரியத்தக்க விஷயம் என்றும் கூறியுள்ளார் அவர். 

எம்.ஜி.ஆர் வெற்றி பெறுவதற்கு அவர் நாடகத்தில் எடுத்துக் கொண்ட விடா முயற்சியும், கடுமையான பயிற்சியும் தான் காரணமாக இருந்த நிலையில், அவரது படங்களை போன்று நல்ல கருத்துக்களை முன்வைக்கும் படங்களை எடுக்க வேண்டும் என்றும், நகைச்சுவை படங்களை பார்க்கும் போது மக்கள் தங்களை மறந்து சிரிப்பதாவ், அத்தகைய படங்களை எடுக்குமாறும், எக்காரணத்தை கொண்டும் மக்களுக்கு தீயவற்றை கற்பிக்கும் படங்களை எடுக்க வேண்டாம் என்றும் தமிழ் திரையுலகினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP