சென்னை: பேருந்தின் சக்கரத்தில் பயணம் செய்த இளைஞர்! வைரல் வீடியோ

சென்னையில் மாநகரப் பேருந்தின் சக்கரத்தில் காலை வைத்துக் கொண்டு சாகசம் என்ற பெயரில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட இளைஞர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது சமூகவலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
 | 

சென்னை: பேருந்தின் சக்கரத்தில் பயணம் செய்த இளைஞர்! வைரல் வீடியோ

சென்னையில் மாநகரப் பேருந்தின் சக்கரத்தில் காலை வைத்துக் கொண்டு சாகசம் என்ற பெயரில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட இளைஞர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமூகவலைத்தளங்களில் வேகமாகப் பரவி வரும் இந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் பேருந்தின் ஜன்னல் கம்பியை பிடித்துக் கொண்டு தொங்குகிறார்.

இளைஞர் ஒருவர் கால்களை பேருந்தின் சக்கரத்தில் வைத்துக் கொண்டு ஏதோ சாதித்து விட்டதைப் போல் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. உடன் பயணிக்கும் நண்பர்களோ அவரைத் தடுக்காமல் ஊக்கப்படுத்துகின்றனர். வீடீயோவை வைத்து பார்க்கும்போது இந்தச் சம்பவம் பல்லவன் சாலையை அடுத்த முத்துசாமி பாலம் அருகே நடைபெற்றதாக தெரிகிறது என காவலர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அந்த வழியாக பேருந்துகளை இயக்கும் மாநகரப் போக்குவரத்துக் கழகத்திடம் போலீசார் விவரங்களைக் கேட்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் நடைபெற்ற இடம், பேருந்து எண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மாநகரப் போக்குவரத்துக் கழகத்திடம் போலீசார் விவரங்களைக் கேட்டு வருகின்றனர். இவர் கல்லூரி மாணவராக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மேலும் மெர்சல் பாலா என்ற பெயரில் மியூசிக்கலியில் இந்த வீடியோ வெளியாகியுள்ளதால் அதை வைத்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newstm.in 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP