ரம்ஜான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்!

ரம்ஜான் பண்டிகையையொட்டி நடைபெற்ற சிறப்பு தொழுகைகளில் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
 | 

ரம்ஜான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்!

ரம்ஜான் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.  

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை இன்று பல பகுதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் ரமலான் பிறை தென்பட்டதையடுத்து ஜாக் ( Jaqh)  அமைப்புகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் இன்று ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர்.

மதுரை தமுக்கம் மைதானம், திருமங்கலம்  உள்ளிட்ட பகுதிகளில்  ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.  இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

ரம்ஜான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்!

தொழுகை முடிந்ததும் உலக நன்மை வேண்டியும், மழை பொழிய வேண்டியும், உலக அமைதி நிலவ வேண்டியும் பிராத்தனை செய்தனர். தொடர்ந்து ஒவ்வொருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP