சைக்கிளில் சென்ற சிறுவன் ஹெல்மெட் அணியாததால் அபராதம்: காவல்துறையினரின் அட்டகாச வீடியோ

ஹெல்மெட் அணியாமல் சைக்கிளில் வந்த சிறுவனைப்பிடித்து அபராதம் விதிக்கும் காவல்துறையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 | 

சைக்கிளில் சென்ற சிறுவன் ஹெல்மெட் அணியாததால் அபராதம்: காவல்துறையினரின் அட்டகாச வீடியோ

ஹெல்மெட் அணியாமல் சைக்கிளில் வந்த சிறுவனைப்பிடித்து அபராதம் விதிக்கும் காவல்துறையின் கடைமை உணர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டம் உள்ள நிலையில், தற்போது புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி கடுமையான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சட்டத்தை மதித்து ஹெல்மெட் அணிகிறார்களோ? இல்லையோ? மாத சம்பளத்தில் பாதியை அரசுக்கு கொடுக்க விருப்பமின்றி ஹெல்மெட் அணிந்து செல்கின்றனர். 

இந்நிலையில், தர்மபுரி மாவட்டம் ஏரியூர் உதவி காவல் ஆய்வாளர் சுப்பிரமணி என்பவர், சைக்கிளில் வந்த சிறுவனைப்பிடித்து ஹெல்மெட் அணியாமல் வந்ததற்காக அபராதம் விதிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சைக்கிளுக்கும் 2 சக்கரம் இருப்பதால் காவல் அதிகாரி சற்று குழம்பிவிட்டார் போல..

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP