புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வீட்டுக்கு தொலைபேசியின் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
 | 

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் வீடு எல்லையம்மன் கோயில் வீதியில் உள்ளது.  புதுச்சேரி காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர் ஒருவர் இன்று தொலைபேசியில் தொடர்புகொண்டு முதல்வர் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்தார். 

இதையடுத்து முதல்வர் நாராயணசாமியின் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். மோப்ப நாய்கள் உடன் நடத்திய சோதனையில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக வந்த மிரட்டல் புரளி என தெரிய வந்துள்ளது. இருந்தும் தற்போது காவிரி பிரச்னை போராட்டம் ஒருபக்கம் நடைபெற்று வருவதால், பாதுகாப்பு கருதி முதல்வர் நாராயணசாமி வீட்டிற்கு இரண்டு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP