சென்னையில் வெளுத்து வாங்கும் மழை!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சாலைகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
 | 

சென்னையில் வெளுத்து வாங்கும் மழை!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சாலைகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 

வடகிழக்கு தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்றிரவு முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டார, புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.  இதன் காரணமாக ஒரே நாளில்  சென்னை நகர் முழுவதும் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல நாட்களுக்கு பிறகு தொடர் மழை பெய்திருப்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

ஒரே நாளில் திருவள்ளூரில் 21செ.மீ, பூண்டியில் 20 செ.மீ,, தாமரைப்பாக்கத்தில் 15 செ.மீ, திருத்தணி 15 செ.மீ சோழவரம் 13 செ.மீ. திருவாலங்காடு 12.செ.மீ ஆர்.கே.பேட்டை 10.செ.மீ  மழை பதிவாகியுள்ளது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP