நாளை மறுநாள் தமிழகம் வருகிறார் அமித் ஷா!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் பொருட்டு பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா நாளை மறுநாள் தமிழகம் வர உள்ளார்.
 | 

நாளை மறுநாள் தமிழகம் வருகிறார் அமித் ஷா!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் பொருட்டு பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா நாளை மறுநாள் தமிழகம் வர உள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து, தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், தமிழகத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா நாளை மறுநாள் தமிழகம் வர உள்ளதாக அக்கட்சியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 2ஆம் தேதி தமிழகம் வரும் அமித் ஷா, பாஜக  போட்டியிடும் தொகுதிகளான தூத்துக்குடி,சிவகங்கை மற்றும் கோவை மக்களவைத் தொகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார். தொடர்ந்து, ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் பிரதமர் மோடியும், ஏப்ரல் 15 -ஆம் தேதி மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP