பிரபல நடிகையின் லட்சியம்....ஆஹா....இதுவல்லவா லட்சியம்...!

100 திரைப்படங்களில் நடிப்பதே தனது லட்சியம் என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.
 | 

பிரபல நடிகையின் லட்சியம்....ஆஹா....இதுவல்லவா லட்சியம்...!

100 திரைப்படங்களில் நடிப்பதே தனது லட்சியம் என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி நடித்து வருபவர் நடிகை காஜல் அகர்வால். இதனால், இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இவர், விஜய், அஜித், சிரஞ்சீவி, பிரபாஸ் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். சமூகவலைதளங்களிலும் ஆக்டிவாக உள்ள இவர், ரசிகர்களுடனும் அடிக்கடி உரையாடுவார்.

தற்போது இந்தியி நடித்து வரும் காஜல் அகர்வாலுக்கு  100 திரைப்படங்களில் நடிப்பது தான் தனது லட்சியம்  என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘நான் ஒரு ஹீரோயினாக 10  ஆண்டுகளாக நடித்து வருகிறேன். இன்னும் பட வாய்ப்புகள் வருகின்றன. நான் தொடர்ந்து பிஸியாக இருக்கிறேன்.

 நான் 50 திரைப்படங்களை தாண்டி நடித்து விட்டேன். மேலும் 100 படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது லட்சியம். எல்லாம் தெரியும் என்ற திமிரு இருந்தால் நம்மால் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியாது. நான் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளேன். ஆனால் கன்னட மொழி படங்களில் இன்னும் நடிக்கவில்லை. ஆனால் தற்போது முதல் முறையாக உபேந்திரா ஹீரோவாக நடிக்கவிருக்கும் ‘கப்சா’ என்ற கன்னட படத்தில் நடிக்கவுள்ளேன். இந்த படத்தை 7 மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்’ என்றார் காஜல்.

newstm.in


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP