மெரினாவில் கலைஞருக்கு 6 அடி இடம் கொடுக்க மறுத்த அதிமுக! - திருவாவூரில் ஸ்டாலின் பிரச்சாரம்

மெரினாவில் கலைஞருக்கு 6 அடி இடம் கொடுக்க மறுத்த அதிமுகவுக்கு திருவாரூர் மக்கள் வாக்களிக்கலாமா? என்று க்லைஞருக்கு சொந்தமான திருவாரூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார்.
 | 

திருவாரூர் மக்கள் மத்தியில் இன்று பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், " கலைஞர் கருணாநிதி அவர்களின் தொகுதியான திருவாரூர் மண்ணில் நிற்பதை நான் பெருமையாக கருதுகிறேன். 

தலைவர் கலைஞர் அவர்கள், நாட்டிற்கும், தமிழகத்திற்கும், முக்கியமாக தமிழுக்காகவும் பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளார். தமிழக மக்களின் ன் நலனுக்காக 95 வயது வரை பாடுபட்டவர் கலைஞர். இட ஒதுக்கீடு, தமிழை செம்மொழி ஆக்கியது உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை புரிந்த அவருக்கு, கடைசியில் அவர் மறைந்தபோது மெரினாவில் 6அடி இடம் கொடுக்க அதிமுக அரசு மறுத்து விட்டது. 

நான், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இடம் நேரடியாக சென்று, நான் கலைஞருக்கு இடம் ஒதுக்குமாறு கூறினேன். அப்படியிருந்தும் அவர்கள் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இறுதியில் நீதிமன்றத்தை நாடி, நாங்கள் நீதியை பெற்றோம். ஆறு அடி இடம் கொடுக்காத அதிமுகவுக்கு திருவாரூர் மக்கள் வாக்களிக்கலாமா? 

எனவே, உங்களது நலனுக்காக கலைஞர் வழியில் பாடுபடவுள்ள எங்களது வேட்பாளர் செல்வராஜை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டுகிறேன்" என்றார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP