சென்னை தொழிலதிபர் வீட்டில் இருந்து 60 சிலைகள் மீட்பு!

சென்னை தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டில் இருந்து 60 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு தகவல் தெரிவித்துள்ளது. இதில் 4 ஐம்பொன் சிலைகள், 20 நந்தி சிலைகள் அடங்கும்.
 | 

சென்னை தொழிலதிபர் வீட்டில் இருந்து 60 சிலைகள் மீட்பு!

தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டில் இருந்து 60 கோவில் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 4 ஐம்பொன் சிலைகள், 20 நந்தி சிலைகள் உள்பட மொத்தம் 60 கோவில் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவையனைத்தும் தமிழகத்தில் உள்ள பிரபல கோவில்களைச் சேர்ந்த தொன்மையான சிலைகள் என தெரிவிக்கப்படுள்ளது. சிலைகள் அனைத்தும் லாரி மூலமாக கும்பகோணம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது. சில சிலைகள் மிகவும் கனமாக உள்ளதால் அவற்றை லாரியில் ஏற்ற கிரேன் கொண்டுவரப்பட்டுள்ளது. 

சிலைகடத்தலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தீனதயாளன், ரன்வீர் ஷாவிடம் சிலைகள் விற்றதாக கூறியதையடுத்து, சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் இங்கு சோதனை நடத்தியுள்ளனர். 

மேலும், இந்த சிலைகள் கைப்பற்றப்பட்ட போது ரன்வீர் ஷா வீட்டில் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP