தமிழகத்தில் மேலும் 4 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கமா? - சபாநாயகரிடம் அரசு கொறடா மனு!

அதிமுக கட்சிக்கு எதிராக செயல்பட்ட மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி சபாநாயகர் தனபாலிடம் புகார் மனு அளித்துள்ளதாக அரசு கொறடா ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
 | 

தமிழகத்தில் மேலும் 4 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கமா? - சபாநாயகரிடம் அரசு கொறடா மனு!

அதிமுக கட்சிக்கு எதிராக செயல்பட்ட மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி சபாநாயகர் தனபாலிடம் புகார் மனு அளித்துள்ளதாக அரசு கொறடா ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

அதிமுக கொறடா ராஜேந்திரன், சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் ஆகியோர் சபாநாயகர் தனபாலை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது, கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான, விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ பிரபு, அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ ரத்தின சபாபதி மற்றும் நாகப்பட்டினம் தொகுதி எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி ஆகிய 4 பேரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு கொறடா ராஜேந்திரன், சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளார். 

அதிமுக கட்சிக்கு எதிராக செயல்பட்டதோடு, பல்வேறு பொதுக்கூட்டங்களில் அதிமுக கட்சிக்கு எதிராக பேசிவந்த இந்த 4 எம்.எல்.ஏக்கள் மீதான புகார் மனுவை வீடியோ ஆதாரங்களுடன் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "கடந்த பல மாதங்களாகவே ரத்தின சபாபதி உள்ளிட்ட 3 சட்டமன்ற உறுப்பினர்களும் அரசுக்கும், கட்சிக்கும் எதிராக அவதூறு பரப்பி பொதுக்கூட்டங்களில் பேசி வந்ததை, சபாநாயகரிடம் வீடியோ ஆதாரங்களுடன் சமர்ப்பித்துள்ளேன். 

அவர்கள் 3 பேரையும் தகுதி நீக்கம் செய்யக்கோரி ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் இது தொடர்பாக புகார் அளித்திருந்தேன். தொடர்ந்து இரண்டாவது முறையாக தற்போது புகாரை அதிக ஆதாரங்களுடன் ஒப்படைத்துள்ளேன். 

அதிமுக அரசுக்கு பதவி பயம் ஒருபோதும் இருந்ததில்லை. தேர்தலை சந்தித்த அனைத்து இடங்களிலும் அதிமுக வெற்றியைப் பெறும்" என்று தெரிவித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP