திருப்பதியில் தமிழக பக்தர்கள் 38 பேர் கைது! திருமலையில் பரபரப்பு!

திருப்பதி திருமலையில் செம்மரங்களை வெட்ட முயன்றதாக 38 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 | 

திருப்பதியில் தமிழக பக்தர்கள் 38 பேர் கைது! திருமலையில் பரபரப்பு!

திருப்பதி திருமலையில் செம்மரங்களை வெட்ட முயன்றதாக 38 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் செம்மரங்களை வெட்டுவதாக கூறி தமிழர்களை அம்மாநில வனத்துறை கைது செய்து தொடர் கதையாகி வருகிறது. திருவண்ணாமலை, தருமபுரி, சேலம் இப்பகுதியை சேர்ந்தவர்களே செம்மரம் வெட்டுவதாக கைது செய்யப்படுகின்றனர்.

இந்த நிலையில், சேஷாலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டுவதற்காக தமிழகத்தைச் சேர்ந்த 38 பேர் திருமலைக்கு வந்ததாக கூறி, அவர்களை தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் கைது செய்து, போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து, அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட 38 பேரும் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP