Logo

தமிழகத்தில் மேலும் 3 மருத்துவக்கல்லூரிகளுக்கு ஒப்புதல்

தமிழகத்தில் மேலும் 3 புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
 | 

தமிழகத்தில் மேலும் 3 மருத்துவக்கல்லூரிகளுக்கு ஒப்புதல்

தமிழகத்தில் மேலும் 3 புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழகத்தில் புதிதாக 3 அரசு மருத்துவ கல்லூரிகளை அமைக்க அனுமதி கேட்டு தமிழக சுகாதாரத்துறை மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்தநிலையில், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகையில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. தலா ரூ.325 கோடி மதிப்பீட்டில் மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்படவுள்ளன. இதில் தமிழக அரசு ரூ.130 கோடி ஒதுக்குகிறது. மத்திய அரசு ரூ.195 கோடி ஒதுக்குகிறது. 

இந்த புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளால் தமிழகத்தில் அரசு மருத்துவக்கல்லூரிகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்கிறது. இதேபோல், தலா 150  எம்பிபிஎஸ் இடங்கள் என 450 இடங்கள் தமிழகத்திற்கு கூடுதலாக கிடைக்கும். இதன் மூலம் மொத்த மருத்துவப்படிப்புக்கான இடங்கள் 4,600 ஆக உயர்கிறது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP