குட்கா ஊழல் வழக்கில் 2 இடைத்தரகர்கள் கைது...சிபிஐ அதிரடி!

குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ சோதனை நடைபெற்று வரும் நிலையில் ராஜேஷ், நந்தகுமார் ஆகிய இரு இடைத்தரகர்கள் சிபிஐ அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். குட்கா ஊழல் வழக்கில்2ம் நாளாக இன்று சோதனை நடைபெற்று வருகிறது.
 | 

குட்கா ஊழல் வழக்கில் 2 இடைத்தரகர்கள் கைது...சிபிஐ அதிரடி!

குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ சோதனை நடைபெற்று வரும் நிலையில் ராஜேஷ்,  நந்தகுமார் ஆகிய இரு இடைத்தரகர்கள் சிபிஐ அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

குட்கா ஊழல் வழக்குகள் சிபிஐ-க்கு மாற்றப்பட்டதையடுத்து, தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று சிபிஐ அதிகாரிகள் தங்கள் அதிரடி சோதனையை தொடங்கினர். குட்கா விற்பனையாளர் மாதவராவின் வீட்டில் கிடைத்த டைரியின் அடிப்படையில் ரெய்டு நடைபெற்று வருகிறது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி ஜார்ஜ், தமிழக டி.ஜி.பி ராஜேந்திரன் உள்ளிட்டோர் வீட்டில் நேற்று  சோதனை நடைபெற்றது. இதில், சென்னை நொளம்பூரில் உள்ள ஜார்ஜ் வீட்டில் நேற்று விடிய விடிய சோதனை நடைபெற்ற நிலையில் இன்று  காலை சோதனை நிறைவு பெற்றது. 

தொடர்ந்து, குட்கா ஊழல் வழக்கில் ராஜேஷ்,  நந்தகுமார் ஆகிய இரு இடைத்தரகர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். சோதனை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP