தோனியை தொடர்ந்து சீண்டும் கவுதம் காம்பீர்! கடுப்பில் ரசிகர்கள்!!

தோனியை தொடர்ந்து சீண்டும் கவுதம் காம்பீர்! கடுப்பில் ரசிகர்கள்!!

தோனியை தொடர்ந்து சீண்டும் கவுதம் காம்பீர்! கடுப்பில் ரசிகர்கள்!!
X

ஐபிஎல் டி20 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித் சர்மாதான் சிறந்த கேப்டன் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.

உலக அளவிலும் சரி, ஐபிஎல் போட்டிகளிலும் சிறந்த கேப்டன் என்றால் அது மகேந்திர சிங் தோனி தான் என்று அனைவரும் சொல்வார்கள். ஆனால் தோனியை தொடர்ந்து தாக்கி பேசி வரும் கவுதம் காம்பீர், ஐபிஎல் போட்டிகளில் சிறந்த கேப்டன் ரோஹித் ஷர்மா என்று கருத்து தெரிவித்திருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 


ரோஹித் ஷர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கெனவே 4 முறை கோப்பையை வென்றுள்ளது. எனவே ஐபிஎல் வரலாற்றில் மிகச் சிறந்த கேப்டனாக அவர் இருப்பார் என்றும், அவர் தன்னுடைய ஓய்வுக்குள்ளாக 6 முதல் 7 ஐபிஎல் கோப்பைகளை நிச்சயம் வெல்வார் என்றும் கவுதம் காம்பூர் கூறியுள்ளார். காம்பீரின் கருத்துக்கு நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it