நாளை காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் கூடுவதற்கு தடை

நாளை காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் கூடுவதற்கு தடை

நாளை காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் கூடுவதற்கு தடை
X

நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் பகுதிகளில் குறிப்பாக குமாரபாளையம், பள்ளிபாளையம், மொளசி, ஜேடர்பாளையம், சோழசிராமணி, மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் கோவில்கள் மற்றும் முக்கிய புண்ணிய தலங்கள் உள்ளன.

இந்த பகுதிகளில் ஆண்டுதோறும் ஆடி மாதம் அமாவாசை தினத்தன்று நாமக்கல் மாவட்டம் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் பொதுமக்கள் தங்களது குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கும் ,  மறைந்த உறவினர்களுக்கும் திதி, தர்ப்பணம் மற்றும் பிற சடங்கு சம்பிரதாயங்கள் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. ஒரே இடத்தில் அதிக அளவில் மக்கள் கூடுவதால் நோய் தொற்று அதிகம் பரவும் அபாயம் இருப்பதால், பொதுமக்கள் நலன் கருதி நாளை (20.07.2020) ஆடி அமாவாசை நாளில் பொதுமக்கள் யாரும் குமாரபாளையம், பள்ளிபாளையம், மொளசி, ஜேடர்பாளையம், சோழசிராமணி,மோகனூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கரையோர பிற பகுதிகளில்  மக்கள் கூடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

தடை உத்தரவை மீறி யாரேனும் மேற்கண்ட பகுதிகளுக்கு வந்தால் அவர்கள் மீதும், அவர்கள் பயன்படுத்திய வாகனங்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நாமக்கல்  மாவட்ட ஆட்சித் தலைவர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it