விநாயகர் ஊர்வலம் ரத்து !! திரட்டப்படும் நிதி , கொரோனா நிவாரண நிதிக்கும் , உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு வழங்க ஏற்பாடு

விநாயகர் ஊர்வலம் ரத்து !! திரட்டப்படும் நிதி , கொரோனா நிவாரண நிதிக்கும் , உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு வழங்க ஏற்பாடு

விநாயகர் ஊர்வலம் ரத்து !! திரட்டப்படும் நிதி , கொரோனா நிவாரண நிதிக்கும் , உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு வழங்க ஏற்பாடு
X

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த , நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வர்த்தக நிறுவனங்கள் , தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள் , வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.

கொரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 3-ம் தேதி வரையும் பின்னர் மே 17-ம் தேதி வரையிலும் ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 4ம் கட்டமாக மே 31-ம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலத்தில் ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் மட்டும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோலவே வாகனப் போக்குவரத்துக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மும்பையில் கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் ரத்து செய்யப்படுவதாக விழா கமிட்டி தெரிவித்துள்ளது.

இதற்காக திரட்டப்படும் தொகையை முதல்வர் நிவாரண நிதிக்கு அளிக்க முடிவு செய்துள்ளதாவும் , அதே போல் சீன தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கும் வழங்க முடிவு செய்துள்ளோம் என கூறினர்

Newstm.in

Next Story
Share it