வீட்டு பணிப்பெண்ணின் இறுதிச் சடங்கை நடத்திய காம்பீர்!

வீட்டு பணிப்பெண்ணின் இறுதிச் சடங்கை நடத்திய காம்பீர்!

வீட்டு பணிப்பெண்ணின் இறுதிச் சடங்கை நடத்திய காம்பீர்!
X

முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிழக்கு டெல்லி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் காம்பீர் தனது வீட்டில் ஏழு ஆண்டுகளாக வேலை செய்து வந்த பெண்ணின் இறுதிச் சடங்கை அவர்களது முறைப்படி நடத்தியுள்ளார். 

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூரை சேர்ந்த சரஸ்வதி பத்ரா என்ற பெண் கடந்த 7 ஆண்டுகளாக காம்பீரின் வீட்டில் வேலை செய்து வந்துள்ளார். நீரழிவு, உயர் ரத்த அழுத்தம் நோயால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த 21ஆம் தேதி டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஊரடங்கு காரணமாக சரஸ்வதி உடலை ஒடிசாவுக்கு கொண்டு செல்ல முடியவில்லை. ஒடிசாவில் உள்ள அவரது குடும்பத்தினரும் டெல்லிக்குவர முடியவில்லை. இதனால் காம்பீரே பணிப்பெண்ணுக்கு அவரது வழக்கப்படி இறுதிச்சடங்கு செய்தார். அவரது இந்த மனிதாபிமான செயலுக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி உள்ளனர். 

newstm.in

Next Story
Share it