இன்று 6 மாவட்டங்களில் முழு முடக்கம் !! ஒட்டு மொத்த கடைகளுக்கும் விடுமுறை...

இன்று 6 மாவட்டங்களில் முழு முடக்கம் !! ஒட்டு மொத்த கடைகளுக்கும் விடுமுறை...

இன்று 6 மாவட்டங்களில் முழு முடக்கம் !! ஒட்டு மொத்த கடைகளுக்கும் விடுமுறை...
X

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78 ஆயிரத்தை தாண்டியது. பலி எண்ணிக்கையும் 1025 ஆக உள்ளது. சென்னையில் நாள்தோறும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால் கடந்த 19-ஆம் தேதி முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஏற்கெனவே 5 - வது கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் போது ஊரடங்கிற்குள் ஒரு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

மளிகை, காய்கறிக் கடைகள் திறப்பு நேரம் மதியம் வரை என குறைக்கப்பட்டது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதாவது கடந்த 21-ஆம் தேதியும் இன்றைய தினம் 28-ஆம் தேதியும் ஞாயிற்றுக்கிழமை அன்று முழு முடக்கம் அமல்படுத்தப்படுவதாக காவல் துறை ஆணையர் விஸ்வநாதன் அறிவித்திருந்தார்.

அதன் படி இன்றைய தினம் பால் விநியோகம் மற்றும் மருந்து விற்பனைக்கு மட்டுமே அனுமதி உண்டு, ஏனைய காய்கறி கடைகள், கறி கடைகள், மளிகை கடைகள், பாத்திர கடைகள் உள்ளிட்டவைகளை திறக்க அனுமதி இல்லை.

அது போல் பால், மருந்து, மருத்துவத்திற்கான அத்தியாசியத்திற்கு மட்டுமே போக்குவரத்து அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் கறிக்கடைகளில் கூட்டம் அலைமோதும்.

ஆனால் இந்த இரு முழு ஊரடங்குகளில் கறிக்கடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. எனினும் மக்கள் சனிக்கிழமை அன்றே கறி, காய்கறி, மளிகை பொருட்களை வாங்கி வைத்து விட்டனர். நாளை அனைத்து கடைகளிலும் மீண்டும் கூட்டம் தொடங்கும் என்பதில் மாற்று கருத்தில்லை..

Newstm.in

Next Story
Share it