தமிழகம் முழுவதும் நாளை ஒரு நாள் முழு  ஊரடங்கு ! - இவைகள் மட்டுமே இயங்கும்..

தமிழகம் முழுவதும் நாளை ஒரு நாள் முழு  ஊரடங்கு ! - இவைகள் மட்டுமே இயங்கும்..

தமிழகம் முழுவதும் நாளை ஒரு நாள் முழு  ஊரடங்கு ! - இவைகள் மட்டுமே இயங்கும்..
X

கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் நாளை (ஜூலை 5) முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறது.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக, சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் மதுரை அகிய மாவட்டங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் இந்த ஊரடங்கு தளா்வுகளுடன் கூடிய ஊரடங்காக திங்கள்கிழமை முதல் மாறவுள்ளது.

மருத்துவமனைகள், மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசியமானவை மட்டுமே இயங்கும் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது.

இதனிடையே, கொரோனா நோய்த்தொற்றினைத் தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு மாநிலம் முழுவதும் நாளை (ஜூலை 5) கடைப்பிடிக்கப்பட உள்ளது.

ஜூலை மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழகம் தழுவிய அளவில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட இருப்பதாக, தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in 

Next Story
Share it