1. Home
  2. தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு... மக்கள் வெளியே வர தடை !



இந்தியாவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. எனினும் தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஜூலை 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஜூலை மாத 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

முழு ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமையன்று காய்கறி, மளிகை கடை, இறைச்சிக்கடைகளும் செயல்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவையின்றி பொதுமக்கள் வெளியே செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஓட்டல்கள், டீக்கடைகள் செயல்படாது. பெட்ரோல் பங்குகளும் செயல்படாது. அத்தியாவசியப் சேவைகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்காக மிகச் சொற்பமான பெட்ரோல் பங்குகள் செயல்படும்.

மருந்துக்கடைகள், மருத்துவமனைகள் நாளை வழக்கம்போல செயல்படும். பால்கடைகளுக்கு காலை நேரத்தில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

newstm.in 

Trending News

Latest News

You May Like