தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு ? முதலமைச்சர் ஆலோசனை...

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு ? முதலமைச்சர் ஆலோசனை...

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு ? முதலமைச்சர் ஆலோசனை...
X

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு , நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 66 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 800 - க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதன் பாதிப்பு சென்னை , திருவள்ளூர் , காஞ்சிபுரம் , செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகமாகி வந்ததால் , இந்த மாவட்டங்களுக்கு 12 நாட்கள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது.

இதை தவிர்த்து மதுரை , தேனி மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகமாகி கொண்டு இருக்கிறது. இதனை தொடர்ந்து தேனியிலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிகரிக்கும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ,

சென்னை தலைமை செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

Newstm.in

Next Story
Share it