சென்னையில் முழு ஊரடங்கு ? நாளை பதிலளிக்கிறது தமிழக அரசு !!

சென்னையில் முழு ஊரடங்கு ? நாளை பதிலளிக்கிறது தமிழக அரசு !!

சென்னையில் முழு ஊரடங்கு ? நாளை பதிலளிக்கிறது தமிழக அரசு !!
X

தமிழகத்தில் தினந்தோறும் , கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக இதன் பாதிப்பு சென்னையில் அதிகம். தமிழகத்தில் கொரோனா உறுதியான நபர்களில் 70 விழுக்காடு நோயாளிகள் சென்னையை சார்ந்தவர்கள்.

மேலும் சென்னையில் மட்டும் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்படலாம் என்று பல ஆதாரமற்ற தகவல் வெளியான நிலையில், இந்த விஷயம் தொடர்பாக நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்ள துவங்கியுள்ளது.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் , சென்னையில் ஊரடங்கை நீடிக்கும் திட்டம் உள்ளதா ? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் , இது குறித்து நாளைக்குள் விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

மீண்டும் ஊரடங்கு நீடிக்கப்பட்டால் , நாட்டின் பொருளாதரம் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் மிகப்பெரிய சிக்கலில் சிக்கும். ஆனால் , கடந்த சில தினங்களுக்கு முன்பு , சென்னையில் ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம்  அரசுக்கு இல்லை என்று சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

Next Story
Share it