சென்னையில் முழு ஊரடங்கு !! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

சென்னையில் முழு ஊரடங்கு !! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

சென்னையில் முழு ஊரடங்கு !! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
X

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக இதன் பாதிப்பு சென்னை , செங்கல்பட்டு , திருவள்ளூர் , காஞ்சிபுரம் , அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல விதிமுறைகளை தற்போது பிறப்பித்துள்ளது.

ஜூன் 19- ம் தேதி முதல் 30 ம் தேதி வரை சென்னையில் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. ஆட்டோ , வாடகை கார்கள் இயங்காது. சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து பணியாளர்கள் பணிக்கு வர தேவையில்லை.

மத்திய , மாநில அரசு அலுவலகங்கள் 33 சதவிகித பணியாளர்களுடன் மட்டும் இயங்கும். சென்னையில் மளிகை , காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும். ரேசன் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும். 21 , 28 ஆகிய இரு நாட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Newstm.in

Next Story
Share it