முழு ஊரடங்கு! மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா!!

 | 

கேரளாவில் ஜூலை 24, 25 என இரு நாட்களுக்கு முழு ஊடரங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்புகள் தொடர்ந்து குறையத் தொடங்கியுள்ளன. ஆனால், கேரளாவில் பாதிப்பு குறையாமல் தொடர்ந்து அதிகமாக பதிவாகி வருகிறது. எனவே வார இறுதிநாட்களில் இந்த வாரமும் அங்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் ஜூலை 24 மற்றும் 25 என இரு நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதற்கான கட்டுப்பாடுகள் 22ஆம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kerala_lockdown

23ஆம் தேதியான வெள்ளிக்கிழமையன்று மாநிலம் முழுவதும் மிகப்பெரிய அளவில் கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது. இதில் 3 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கேரளாவில் கொரோனா பாதிப்புகளைத் தொடர்ந்து, ஜிகா வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 41 ஆக அதிகரித்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP