1. Home
  2. தமிழ்நாடு

நாளை முதல் , ஊரடங்கு கிடையாது !! முதலமைச்சர் அறிவிப்பு..

நாளை முதல் , ஊரடங்கு கிடையாது !! முதலமைச்சர் அறிவிப்பு..


கொரோனா பாதிப்பு , இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் பரவ ஆரம்பிக்கிறது. இதையடுத்து, கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் முடக்கப்பட்டது.

அத்தியாவசிய தேவைகளுக்கான சேவையை தவிர அனைத்து விதமான நடவடிக்கைகளும் முடக்கப்பட்டது. பொது முடக்க நடவடிக்கையான அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில் , தற்போது நாடு முழுவதும் அன்லாக் செயல்முறை தொடங்கியுள்ளது.

பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு வழிகாட்டுதலின் இதனை பின்பற்றி வரும் மாநிலங்கள் , தங்களுக்கு ஏற்றவாறு தளர்வுகளை அளித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை வருகிற 31 ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், இம்மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கர்நாடகாவில் நாளை முதல் பொதுமுடக்கம் நீக்கப்படுகிறது என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

எனினும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் மட்டும் கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனாவை தடுக்க ஊரடங்கு கை கொடுக்காது என்று தெரிவித்துள்ள எடியூரப்பா, கொரோனா பரவலை தடுக்க மக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பொருளாதாரம் நலிவடைந்துள்ளதால் மக்கள் நாளை முதல் வழக்கம் போல் வேலைக்கு செல்ல வேண்டும். சீரான பொருளாதாரத்தை நிலை நாட்டிக் கொண்டே கொரோனாவுக்கு எதிராக நாம் போராட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

Newstm.in

Trending News

Latest News

You May Like