1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் நாளை முதல் , காலை 6 மணி முதல் , 2 மணி வரை மட்டுமே,..செயல்படும் !!

சென்னையில் நாளை முதல் , காலை 6 மணி முதல் , 2 மணி வரை மட்டுமே,..செயல்படும் !!


கொரோனாவை கட்டுப்படுத்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வரும் 19ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஜுன் 30ம் தேதி வரை அத்தியாவசியப் பொருட்கள் விநியோகங்களுக்கும் கூட கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகளே வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நாளை முதல் ஊரடங்கு முடியும் நாளான ஜுன் 30ம் தேதி வரையில் சென்னையில் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் என வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ; சென்னை மாநகரில் கொரோனா தொற்று அதிகமாகப் பரவுவதை கவனத்தில் கொண்டு நாட்டின் நலன், மக்கள் நலன், வணிகர் நலன் கருதி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் சுதேசி நாயகன் த. வெள்ளையன் அவர்கள் அறிவுறுத்தல்படி,

வரும் 16ம் தேதி முதல் 30ம் தேதி வரை வியாபாரம் செய்து மதியம் 2 மணிக்கு கடைகள் அடைக்க வேண்டும் என்று மத்திய சென்னை, வடசென்னை, தென்சென்னை ஆக 3 மாவட்ட நிர்வாகிகள் சேர்ந்து முடிவு செய்யப்பட்டுள்ளது.

வணிகர்களும், பொதுமக்களும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். சானிடைஷேர் உபயோகப்படுத்த வேண்டும், தேவையில்லாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என வணிகர்களையும், பொதுமக்களையும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம், எனத் தெரிவித்துள்ளார்.

Newstm.in

Trending News

Latest News

You May Like