1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் போலி கால் சென்டர் நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி

சென்னையில் போலி கால் சென்டர் நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி


கொரோன  காலத்திலும் போலியான கால் செண்டர் நடத்தி பண மோசடி செய்தவர்களை  திருவான்மியூர் காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது , மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வங்கிகளில் கணக்கு வைத்துள்ள சாமானிய மக்களை ஏமாற்றி அவர்களின் பணம் நூதன முறையில் கொள்ளையடிக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனை  வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

 அப்போது  சென்னை அண்ணா சாலையில் போலியாக கால்சென்டர் நடத்திய கும்பலை கையும் களவுமாக பிடித்தனர். இதில் சிக்கிய சரவணன் மற்றும் செல்வகுமாரை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார்,  இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மேலும் 3 பேரை  கைது செய்தனர்.

பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில், பெருங்குடி மற்றும் திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் கால்சென்டர் நடத்திய ஜகாத், ராஜ்குமார் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர்.

 இவர்களிடம் நடத்திய விசாரணையில் குறைந்த வட்டிக்கு கடன்வாங்கி தருவதாக கூறிய சுமார் 400க்கும் மேற்பட்ட சமானிய மக்களிடம் 2 கோடி ரூபாய் வரை இந்த கும்பல் மோசடி செய்துள்ள  தகவல் வெளியானது. வாடிக்கையாளர்களை நம்பவைக்க  பெண்களை பேசவைத்து, மோசடி செய்துள்ளனர். என்பதும் போலீசார் விசாரணையில் வெளியானது. 

போலீசார் மேலும் இவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பரவி வரும் கொரோனா சூழலை பயன்படுத்தி கடன்வாங்கி தருவதாக கூறும் நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களை போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like