தமிழகத்தில் நான்கு சிறப்பு ரயில்கள் இயக்க தயார்! - தெற்கு ரயில்வே

 | 

தமிழகத்தில் ஏசி வசதி இல்லாத நான்கு ரயில்களை இயக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதனை ரயில்வே வாரியத்திடம் தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ளது. 

கோவை - மயிலாடுதுறை, மதுரை - விழுப்புரம், திருச்சி - நாகர்கோவில், கோவை - காட்பாடி இடையே சிறப்பு ரயில்கள் இயக்குமாறு தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. அந்த கோரிக்கையை குறிப்பிட்டு ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ள தெற்கு ரயில்வே, ரயில்களை இயக்க தாங்கள் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பொதுமுடக்கத்திற்கு இடையே அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் ரயில்வேதுறை முன்னதாக அறிவித்த 200 ரயில்களில் தமிழகத்துக்கு எந்த ரயிலும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP