காவல் உதவி ஆய்வாளரை எட்டி உதைத்த அதிமுக முன்னாள் எம்.பி !! வைரலாகும் வீடியோ
காவல் உதவி ஆய்வாளரை எட்டி உதைத்த அதிமுக முன்னாள் எம்.பி !! வைரலாகும் வீடியோ

சேலம் ஓமலூர் அருகே உள்ள சுங்க சாவடி ஒன்றில் இன்று இரவு காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்றை நிறுத்தி அவர்களிடம் அடையாள அட்டை குறித்து கேள்வி எழுப்பிய போது வாகனத்தில் அமர்ந்து இருந்த அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூனன் காவல் துறையினருடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
தன்னை தெரியாதா தன்னிடம் அடையாள அட்டை ஏன் கேட்கிறீர்கள் என்று கூறி அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தோடு ஒரு கட்டத்தில் காவல் துறையினரை தாக்கி எட்டி உதைத்து அவர்களுடன் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பணியில் இருந்த காவல்துறை உதவி ஆய்வாளரை எட்டி உதைத்து அதிமுக முன்னாள் எம்பி அர்ஜுனன் அராஜகம் pic.twitter.com/MhRxumd46h
— Dina Maalai (@DinaMaalai) June 29, 2020
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் இந்த சம்பவம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்ட போதும் அவர் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் இதுவரை அவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Newstm.in