உணவகங்களில் உணவு இலவசம் !! ஆணையர் அதிரடி உத்தரவு

உணவகங்களில் உணவு இலவசம் !! ஆணையர் அதிரடி உத்தரவு

உணவகங்களில் உணவு இலவசம் !! ஆணையர் அதிரடி உத்தரவு
X

கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்படாமல் அமலில் உள்ளதால் , பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலையோர பகுதியில் இருக்கும் முதியவர்கள் , சாலையிலேயே தங்கியிருக்கும் குடும்பங்கள் , அன்றாடம் வேலை பார்த்து சம்பாதிக்கும் நபர்கள் என எண்ணற்ற பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது இவர்களுக்கு அன்றாட வாழ்க்கை மிகவும் மோசமடைந்துள்ளது. வெளியே எங்கும் செல்ல முடியாததால் உணவு தேவைக்கு எண்ண செய்வது என்று அறியாமல் திகைத்து நின்றனர். உணவுகளுக்கு இவர்கள் நம்பி இருந்தது அம்மா உணவகத்தை மட்டும் தான் , ஆனால் அவர்களிடம் தற்போது பணப்புழக்கம் இல்லாததால் பட்டிணியாக இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் தான் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் இலவச உணவு வழங்கப்படும் எனவும் ஊரடங்கு முடியும் வரை இலவச உணவு தொடரும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். அம்மா உணவகத்தில் முட்டையுடன் கூடிய இலவச உணவு வழங்கப்பட இருப்பதால் பயணாளிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newstm.in

Next Story
Share it