1. Home
  2. தமிழ்நாடு

நடிகர் சங்கத்தில் குவிந்த நிதி.. யார் யார் எவ்வளவு அளித்தார்கள்.?

நடிகர் சங்கத்தில் குவிந்த நிதி.. யார் யார் எவ்வளவு அளித்தார்கள்.?


தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு இதுவரை வசூலான நிதி தொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவால் நாடே முடங்கிப் போய் உள்ளது. ஆகவே திரைத்துறையினர் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதுவரை நடிகர் சங்கத்திற்கு எவ்வளவு நிதி வந்துள்ளது என்பது தொடர்பாக ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கை விவரம் வருமாறு:-

கொரோனா தொற்றால் நாடெங்கும் முடங்கிக் கிடக்கும் வேளையில் நாடக மற்றும் திரைப்பட நடிகர் நடிகைகளுக்கு உதவுமாறு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தனி அதிகாரியிடம் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் மற்றும் பலர் வேண்டுகோள் வைத்தனர். அதன்படி, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள திரைப்பட நலவாரிய அமைப்பு உறுப்பினர்கள் அனைவருக்கும் தலா ₹1000 உதவி வழங்கிடத் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தமிழக அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
 
அதைத் தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு, பல்வேறு தரப்பிலிருந்தும் நிதி உதவிகளையும் பொருள் உதவிகளையும் அளித்து வருகிறார்கள். கடந்த தினம் நடிகர் சங்கத்துக்கு ராகவா லாரன்ஸ் ரூபாய் 25 லட்சம் நிதி உதவி வழங்கி சிறப்புச் செய்துள்ளார். இந்த பெரும் உதவி பலபேருக்குப் பயனுள்ளதாக இருக்கும். அவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் இதுவரை,
பூச்சி முருகன் - ரூ.10,000
ஐஸரி கணேஷ் - ரூ.10 லட்சம்,
சத்யப்ரியா- ரூ.10,000,
பிளாக் பாண்டி- ரூ.1000
பொன்வண்ணன்- ரூ.25,000,
சேலம் பார்த்திபன் - ரூ.10,000
ரித்விகா(எ)மாலதி- ரூ.5,000
SJ. சூர்யா- ரூ.50,000,
கோவை சரளா- ரூ.10,000,
ரோகிணி - ரூ.10,000,
சந்தான பாரதி - ரூ.5,000
லதா சேதுபதி - ரூ.10,000,
நாகிநீடு- ரூ.10,000
சச்சு(எ) சரஸ்வதி - ரூ.10,000,
பிரபா ரமேஷ் - ரூ.10,000,
ஆதி- ரூ.25,000,
சூரி - ரூ.1 லட்சம்
M. நாசர் - ரூ.50,000,
சங்கீதா - ரூ. 15,000,
SI.கார்த்தி - ரூ.2 லட்சம்
R.K.சுரேஷ்- ரூ.10,000,
M. சசிகுமார் - ரூ.1லட்சம்,
குட்டி பத்மினி- ரூ.15,000,
பசுபதி- ரூ.15,000
அழகு.K - ரூ.10,000,
கருணாஸ்- ரூ.10,000,
S.செல்வா- ரூ.1,000
சந்தோஷ் பிரசன்னா - ரூ.2,000,
விவேக்- ரூ.3,50 லட்சம்,
JC ஜூவல்லர்ஸ் லிமிடெட்- ரூ.20,000
R. சாரதா - ரூ.10,000
வெண்ணிறாடை மூர்த்தி - ரூ.20,000 

இவர்கள் நிதி உதவி அளித்துள்ளனர். மேலும் பல நடிகர் நடிகைகள் தமிழ் நாடு முழுக்க உள்ள நாடக நடிகர் நடிகைகள் வீட்டுக்குத் தேவையான மளிகை சாமான்கள் கொடுத்து உதவி வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் கரம் நீட்டி உதவி அளித்த இவர்கள் அனைவருக்கும் அனைத்து நடிகர், நடிகை சமூகம் சார்பாகத் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் நாசர் மற்றும் நிர்வாகிகள் இதன்மூலம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

newstm.in 

Trending News

Latest News

You May Like