1. Home
  2. தமிழ்நாடு

நெகிழ்ச்சி! நிவாரணமாக வந்த தங்கத்தை திரும்பக் கொடுத்த ஆட்சியர்!!

நெகிழ்ச்சி! நிவாரணமாக வந்த தங்கத்தை திரும்பக் கொடுத்த ஆட்சியர்!!


கொரோனா நிவாரண நிதியாக மூன்றரை பவுன் தங்கத்தை கொடுத்த விதவைப் பெண்ணுக்கு அதனை மாவட்ட ஆட்சியர் திரும்பக் கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜபாளையத்தை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை கவிதா தன்னிடமுள்ள மூன்றரை பவுன் தங்க நகையை கொரோனா நிவாரண நிதியாக பெற்றுக்கொள்ளும்படி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். அவர் தனது மகன் உடன் சென்றிருந்தார்.

அப்போது ஆட்சியர் மேகநாதரெட்டி நகையை எதற்காக நிவாரணமாக வழங்குகிறீர்கள் என கேட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தனது கணவர் விபத்தில் இறந்த விட்டதாகவும், மக்களின் நலனுக்காக வழங்குவதாக கூறினார்.

அதைக் கேட்ட மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி அந்த நகையை கவிதாவிடம் திரும்ப வழங்கியதோடு ஆதரவில்லாமல் மகனுடன் வாழ்ந்து வரும் நிலையில் சேமிப்பாக அதை வைத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தினார்.

தான் சிரமப்பட்டாலும் பொதுமக்கள் நலனுக்காக தனது நகையை வழங்க முன் வந்த கவிதாவிற்கு அரசு வேலைக்கு பரிந்துரை செய்வதாகவும் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி உறுதி அளித்தார்.

அதேபோல் அவரது கவிதாவின் மகன் கல்வி முடிக்கும் வரை அனைத்து செலவையும் அரசே ஏற்கும் வகையில் ஏற்பாடு செய்தாகவும் கவிதாவிடம் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.

newstm.in

Trending News

Latest News

You May Like