இரயில் கட்டணத்தை விட, ஃப்ளட்பார்ம் டிக்கெட் விலை அதிகம்!! மேலும் உயர்த்துகிறது தென்னக ரயில்வே!!

சென்னை செண்ட்ரல் எம்.ஜி.ஆர் இரயில் நிலையத்தின் நடைமேடை கட்டணம் உயர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் முதல் நடைமேடை கட்டணம் 10 ரூபாயிலிருந்து 15 ருபாய்க்கு உயர்த்தப்படுகிறது.
 | 

இது குறித்து சொல்லும் போது ஏப்ரல் முதல் ஜூன் வரை மட்டும் தான் இந்த கட்டணம் என்றும் தெரிவித்துள்ளது. இதற்கு காரணம் கோடைக்காலத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.  அதனால் தான் இந்த உயர்வு என்ற தகவலும் வெளியாகியுள்ளது. எனினும் இவை இந்த மூன்று மாத காலம் மட்டுமா அல்லது அப்படியே தொடருமா என்ற சந்தேகமும் எழுகிறது. 

இரயில் பயணத்தை விட, ஃப்ளாட்பார்ம் டிக்கெட்டின் கட்டணம் மூன்று மடங்கு அதிகமாக இருப்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது என்று இந்த அறிவிப்பு குறித்து பயணிகள் புலம்பி வருகின்றனர். சாதாரணமாக குறைந்தபட்ச கட்டணமாக புறநகர், நகர பகுதிகளுக்கு இரயிலில் பயணிக்க ரூ5 நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், செண்ட்ரல் ரயில் நிலையத்தில், ப்ளட்பார்ம் டிக்கெட் எடுப்பதற்கு பதிலாக, அடுத்த ரயில் நிலையத்திற்கான டிக்கெட்டை எடுத்துவிட்டு, ரயில் நிலையத்திற்குள் உறவினர்களையும், நண்பர்களையும் வழியனுப்ப செல்கிறார்கள்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP