மீனவர்கள் மறுஅறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம்..!
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, தென்கிழக்கு வங்கக் கடலில் அக்டோபர் 14ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.. இது வலுவடைந்து தெற்கு ஆந்திரா, வடதமிழகம், புதுவை கடலோரப் பகுதிகளை நோக்கி அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அக்டோபர் 14,15 தேதிகளில், கடலோரப் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும், அக்டோபர் 16, 17 தேதிகளில் வட தமிழகம், புதுவை கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் அக்டோபர் 16,17 தேதிகளில் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது .
.png)